`நீங்கள் இரும்புப் பெண்மணி’- தசைநோயால் அவதிப்படும் சமந்தாவுக்கு நம்பிக்கை கொடுத்த இயக்குநர்!

சமந்தா
சமந்தா

மையோசிடிஸ் எனும் தசைநோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சைப் பெற்று வரும் நடிகை சமந்தாவுக்கு இயக்குநர் ராகுல் ரவிந்திரன் நம்பிக்கை ஊட்டும் வகையில் பரிசு ஒன்றை அனுப்பியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமீபமாக அவர் மையோசிடிஸ் எனும் தசைநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த சிகிச்சைக்காக நடிகை சமந்தா தென்கொரியா செல்கிறார் என்றும் நடிப்புக்கு நீண்ட பிரேக் எடுத்துக் கொண்டு உடல்நலனில் கவனம் செலுத்த உள்ளார் என்றும் தகவல்கள் வெளியானது. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘யசோதா’ திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், சமந்தாவுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக இயக்குநரும் நடிகருமான ராகுல் ரவிந்திரன் பரிசு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர், ‘சாம், நீங்கள் ஒரு இரும்புப் பெண்மணி. சுரங்கப்பாதை எப்போதும் இருள் நிறைந்ததாகவும் ஒளிக்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லாமலும்தான் இருக்கும். இப்போது உங்கள் கால்கள் கனமானதாக உள்ளது.

ஆனால், முடிந்த அளவுக்கு முன்னேறிக் கொண்டு இருக்கிறீர்கள். போராட்டக் குணம் கொண்டவரான நீங்கள் உங்கள் பயத்தையும் சந்தேகத்தையும் போக்கிக் கொண்டு வெற்றியின் பாதையில் முன்னேறிக் கொண்டே இருக்கிறீர்கள். இதுபோன்ற தாமதங்கள் இருந்தாலும் பரவாயில்லை. களத்தில் உங்களைப் போன்று போராடுபவர்கள்தான் வெற்றிப் பெறுவார்களே தவிர பாதியில் செல்பவர்கள் அல்ல. இந்த காலம் உங்களை இன்னும் வலிமையாக்கி எப்போதும் வலிமையுடையவளாக மாற்றும்'' எனக் கூறியுள்ளார்.

இதனை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ள சமந்தா, ’என்னைப் போன்று போராடுபவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். தொடர்ந்து போராடுங்கள், சீக்கிரமே இன்னும் அதிகமாக நாம் வலிமை அடைவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in