’இந்த வேதனையை எப்படி போக்குவேன்?’: இளையராஜா

லதா மங்கேஷ்கருடன் இளையராஜா
லதா மங்கேஷ்கருடன் இளையராஜா

லதா மங்கேஷ்கர் மறைவு என் மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது என்று இசை அமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 92. இவர், தமிழில், இளையராஜா இசையில் சில பாடல்களை பாடியிருக்கிறார். கமல்ஹாசனின் ’சத்யா’ படத்தில் இடம்பெற்ற ’வளையோசை சலசலவென’, பிரபுவின் ‘ஆனந்த்’ படத்தில் இடம்பெற்ற ’ஆராரோ ஆராரோ’, கார்த்தி நடித்த ‘என் ஜீவன் பாடுது’ படத்தில், ’எங்கிருந்தோ அழைக்கும்’உட்பட சில பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில் இளையராஜா வீடியோவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

இளையராஜா, லதா மங்கேஷ்கர்
இளையராஜா, லதா மங்கேஷ்கர்

இந்திய திரைப்பட இசை உலக வரலாற்றில் கடந்த 60, 70 ஆண்டுகளுக்கும் மேலாக, தன்னுடைய தெய்வீக, காந்தர்வக் குரலால் உலக மக்களை எல்லாம் மயக்கித் தன் வசத்தில் வைத்திருந்த லதா மங்கேஷ்கர் மறைவு என் மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த வேதனையை எப்படி போக்குவேன் என்பது எனக்கு தெரியவில்லை. அவருடைய இழப்பு, இசை உலகத்திற்கு மட்டும் அல்ல, இந்த உலகிற்கே மாபெரும் இழப்பாகும் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அவரை இழந்து தவிக்கும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆஷாஜிக்கும், ஹ்ருதயநாத் மங்கேஷ்கருக்கும், உஷா மங்கேஷ்கருக்கும் என் தனிப்பட்ட முறையில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு இளையராஜா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in