உறுதியானது 'வாரிசு' ரிலீஸ்; அட்டகாசமான புதிய போஸ்டர் வெளியீடு: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

உறுதியானது 'வாரிசு' ரிலீஸ்; அட்டகாசமான புதிய போஸ்டர் வெளியீடு: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் அட்டகாசமான புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது படக்குழு. அதோடு படத்தின் ரிலீஸ் தேதியையும் உறுதி செய்துள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் 'வாரிசு'. ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் சாட்டிலைட் உரிமை 50 கோடி ரூபாய்க்கும், டிஜிட்டல் உரிமை 60 கோடி ரூபாய்க்கும், வெளிநாட்டு உரிமை 32 கோடி ரூபாய்க்கும், இந்தி டப்பிங் உரிமை 32 கோடி ரூபாய்க்கும், ஆடியோ உரிமை 10 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியிருக்கிறது. இதன் மூலம் வெளியிடப்படுவதற்கு முன்பே இப்படம் 184 கோடி ரூபாய் வசூல் ஈட்டி உள்ளது.

இந்நிலையில் தீபாவளியையொட்டி வாரிசு படக்குழு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. வாரிசு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளதோடு, பொங்கல் அன்று படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. அடுத்த வாரத்தில் இருந்து வாரிசு அப்டேட் வரும் என தயாரிப்பு நிறுவனம் சூசகமாக தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in