
‘பொன்னியின் செல்வன்2’ படத்தின் முதல் சிங்கிள் குறித்து படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டப் பலரது நடிப்பில் கடந்த வருடம் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியானது. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாவது பாகம் இந்த வருடம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. படம் வெளியாக இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில், இதன் புரோமோஷன் பணிகளைப் படக்குழு தற்போது முழு வீச்சில் ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில், தற்போது படத்தில் இருந்து முதல் பாடல் விரைவில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது. ’குந்தவை’ கதாபாத்திரத்திற்காக நடிகை த்ரிஷா தயாராகும் பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் புரோமோஷனல் டூர் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.