அனுஷ்காவிற்கு அழகான தொடை... ஹாட் ஜிலேபி அவர்... மேடையில் ஜொள்ளு விட்ட பிரபல காமெடி நடிகர்!

அனுஷ்கா ஷெட்டி
அனுஷ்கா ஷெட்டி

நடிகை அனுஷ்காவை இரட்டை அர்த்த வசனத்தில் கேலி செய்த காமெடி நடிகரை ரசிகர்கள் கடுமையாக தாக்கி வருகின்றனர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. சினிமாவை விட்டு சில ஆண்டுகள் விலகி இருந்தவர் இன்று வெளியாகியுள்ள 'மிஸ் ஷெட்டி, மிஸஸ் பாலிஷெட்டி' படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் நடிகை அனுஷ்கா குறித்து தெலுங்கு காமெடி நடிகர் அலி மேடையில் சொன்ன இரட்டை அர்த்த காமெடி பேச்சு, ரசிகர்களைக் கடுப்பேற்றி விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.

நடிகை அனுஷ்கா, ‘சைஸ் ஜீரோ’ படத்தில் கடந்த 2015ம் ஆண்டு நடித்திருந்தார். இந்த படம் தமிழில் ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற பெயரில் வெளியானது. இதன் இசை வெளியீட்டு விழாவில் தெலுங்கு திரையுலகில் பிரபல காமெடி நடிகரான மொஹமத் அலி கலந்து கொண்டார்.

நடிகர் அலி, அனுஷ்கா
நடிகர் அலி, அனுஷ்கா

அப்போது அனுஷ்காவைப் பற்றி பேசிய அவர், 'அனைவரும் சாப்பிட விரும்பும் ஹாட் ஜிலேபி அனுஷ்கா. அனுஷ்காவிற்கு அழகான தொடை இருக்கிறது. 'பில்லா' படம் பார்த்ததில் இருந்து நான் இவரது ரசிகராக மாறி விட்டேன்' என்று பேசினார். இது ரசிகர்களுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது.

நடிகர் அலி, அனுஷ்கா குறித்து மட்டுமல்லாமல் ஒரு முறை சமந்தாவின் இடை அழகு குறித்தும் மேடையில் பேசி பிரச்சினையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in