'கக்கன்’ பட இசை வெளியீடு.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!

'கக்கன்’ பட ஆடியோ மற்றும் டிரெய்லரை வெளியிட்ட முதல்வர்!
'கக்கன்’ பட ஆடியோ மற்றும் டிரெய்லரை வெளியிட்ட முதல்வர்!

மூத்த அரசியல்வாதியும் சுதந்திர போராட்ட வீரருமான ‘கக்கன்’ அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று இசை மற்றும் ட்ரைலரை வெளியிட்டார்.

சுதந்திரப் போராட்ட வீரரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கக்கனின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக தயாராகி உள்ளது. பொது வாழ்வில் எளிமையையும், நேர்மையையும் தனது வாழ்நாளின் கடைசி மூச்சு வரைக் கடைப்பிடித்த முன்னாள் காங்கிரஸ் அமைச்சரான கக்கனின் வாழ்க்கை வரலாறு விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், இன்று 'கக்கன்' படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடைப்பெற்ற விழாவில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

முதல் ஆடியோவை கக்கனின் மகள் கே. கஸ்தூரிபாய் மற்றும் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

"கக்கனைப் பற்றிய படம் வரவேற்கத்தக்கது. நாங்கள் ஆட்சியில் கூட இல்லை. அவர்கள் படத்தைத் தயாரித்தால் அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. வணிக ரீதியாகவும் வெற்றி பெறாது. திருப்திக்காக செய்கிறார்கள். தயாரிப்பாளர் என்னைச் சந்தித்த போது, ​​அவர் திருப்திக்காக இதைச் செய்கிறார் என்று என்னிடம் கூறினார். நான் தயாரிப்பாளரிடம் எப்படி இவ்வளவு ஆர்வம் என்று கேட்டேன். அவர்கள் கக்கனை சிறுவயதிலிருந்தே பின்பற்றுவதாக என்னிடம் கூறினார்" என்று கே.எஸ்.அழகிரி பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in