`இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு முதலமைச்சர் முடிவுகட்ட வேண்டும்’- இயக்குநர் சேரன் ஆவேசம்!

இயக்குநர் சேரன்
இயக்குநர் சேரன்'இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு முதலமைச்சர் முடிவுகட்ட வேண்டும்’ - இயக்குநர் சேரன் ஆவேசம்..!

’’தலித் இளைஞர்கள் தாக்கப்படும் செயலுக்கு தமிழக முதலமைச்சர் முடிவு கட்ட வேண்டும். இந்தமாதிரியான காட்டுமிராண்டித்தனமான செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன்’’ என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

புவனகிரி அருகே சாத்தப்பாடியைச் சேர்ந்தவர்கள் புதுப்பேட்டை கடலில் சுவாமி தீர்த்தவாரி முடிந்து, நேற்று முன்தினம் இரவு டிராக்டரில் சுவாமியை ஊருக்கு திரும்ப எடுத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த ஊர்வலத்தில் சில இளைஞர்கள் பாடல் இசைத்தபடி நடனமாடி சென்றதை, மேலமணக்குடி பிள்ளையார் கோயில் அருகில் கலியன் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த கலியன், சுபாஷ், குமரேசன், ஞானபிரகாசம் ஆகியோர் சேர்ந்து தாக்கியதில் சுவாமி ஊர்வலத்தில் சென்றவர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்களை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றிச் சென்றபோது வாகனத்தை நிறுத்தி கலியன் மற்றும் அவர் மகன் அஜய் ஆகிய இருவரும் சேர்ந்து ஆம்புலன்ஸில் இருந்தவர்களை திட்டி, கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து கூச்சலிட்ட அப்பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி மற்றும் ஜெயந்தி ஆகியோரையும் தாக்கினர்.

இந்த நெஞ்சை பதற வைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பலரும் இதற்கு தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’ தமிழக முதலமைச்சர் கண்டிப்பாக இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும்.. கும்பலாக காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்’’ என குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் சேரன் ட்விட்டர்
இயக்குனர் சேரன் ட்விட்டர்'இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு முதலமைச்சர் முடிவுகட்ட வேண்டும்’ - இயக்குனர் சேரன் ஆவேசம்..!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in