விட்ட இடத்தைப் பிடித்த பிரதீப்: மீண்டும் வாய்ப்பு கொடுக்கும் விஜய் டிவி?

கமல்ஹாசன், பிரதீப் ஆண்டனி
கமல்ஹாசன், பிரதீப் ஆண்டனி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப்புக்கு விஜய் தொலைக்காட்சி மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ்7 நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதில் போட்டியாளராகப் பங்கேற்ற பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினர். அவரது வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம் பிக் பாஸ் இல்லத்திற்குள் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதுதான். இதற்கு பார்வையாளர்கள் நிறைய பேர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

மாயா, பூர்ணிமா கேங்தான் திட்டமிட்டு அவரை வெளியேற்றியது எனவும், பிரதீப் அவரது தரப்பை விளக்க கமல்ஹாசன் வாய்ப்பு கொடுக்கவில்லை எனவும், விஜய் டிவி சேஃப் கேம் ஆடுகிறது என்றும் சமூக வலைதளங்களில் பலர் குற்றம் சாட்டி வந்தனர்.

நடிகர் கமல்ஹாசன்...
நடிகர் கமல்ஹாசன்...

மேலும் பிரதீப்பை மீண்டும் நிகழ்ச்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற ஹேஷ் டேக்கும் இணையத்தில் டிரெண்டானது. இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் விடை கொடுக்கும் விதமாக, கமல்ஹாசன் இந்த வார எபிசோடில் மாயா, பூர்ணிமா கேங் பிரதீப் மீது தாங்கள் வைத்த குற்றச்சாட்டில் உறுதியாக இருப்பதாகவும் பிரதீப்பிடம் விளக்கம் கேட்டால், அவர் தவறை ஒப்புக் கொள்ளாமல் நான் அப்படித்தான் நடப்பேன் எனக் கூறியதாலும் அவரை பேசவிடாமல் அனுப்பி விட்டதாக கமல்ஹாசன் கூறினார்.

பிரதீப் ஆண்டனி
பிரதீப் ஆண்டனி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது இதில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பணத்தை வைத்துக் கொண்டு தன்னுடைய இயக்குநர் கனவை நிறைவேற்றுவேன் என பிரதீப் சொல்லி இருந்தார். இதனை நிறைவேற்ற பிரதீப்புக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறது விஜய் டிவி.

அந்த வகையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் உருவாக இருக்கும் ஒரு வெப் தொடர் இயக்க பிரதீப்பிடம் கதை கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதனைத் தயார் செய்யும் பணியில் தற்போது தீவிரமாக உள்ளாராம் பிரதீப். விரைவில் கதைசொல்லி அது அவரது சினிமா கனவை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in