Bigg Boss7: வைல்ட் கார்டால் வந்த மாற்றம்...டபுள் எவிக்‌ஷன் பயத்தில் போட்டியாளர்கள்!

பிக் பாஸ் கமல்ஹாசன்...
பிக் பாஸ் கமல்ஹாசன்...

பிக் பாஸ்7 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஐந்து போட்டியாளர்கள் உள்ளே நுழைவதால் டபுள் எவிக்‌ஷன் இருக்குமா எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில்...
பிக் பாஸ் வீட்டில்...

பிக் பாஸ்7 தமிழ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து இப்போது வரை பரபரப்பாக நடந்து வருகிறது. முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட, அதைத் தொடர்ந்து பவா செல்லதுரையும் உடல்நிலை காரணமாக வெளியேறினார். அதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக விஜய் வர்மா குறைந்த மக்கள் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் வைல்ட் கார்டு எண்ட்ரி குறித்து கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

அதுவும் இந்த முறை ஐந்து பேர் வைல்ட் கார்டு எண்ட்ரியில் நுழைய இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ராஜா ராணி’ அர்ச்சனா, கானா பாலா, சூப்பர் சிங்கர் புகழ் மானசி, பைக் ரேசர் சாம் சாமுவேல்ஸ், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் நமீதா மாரிமுத்துவின் தத்து மகள் பிரவீனா மாயா ஆகியோரது பெயர் அடிபடுகிறது.

பிக் பாஸ் அக்‌ஷயா...
பிக் பாஸ் அக்‌ஷயா...

ஒரே நேரத்தில் ஐந்து பேர் வைல்ட் கார்ட் எண்ட்ரியில் இந்த வாரம் நுழைய இருப்பதால் டபுள் எவிக்‌ஷனுக்கு இந்த வாரம் வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் அக்ஷயா, விக்ரம், வினுஷா, யுகேந்திரன், விஷ்ணு, கூல் சுரேஷ், மாயா, ஜோவிகா, மணிசந்திரா, நிக்சன், பிரதீப், என மொத்தம் 11 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர்.

குறைந்த வாக்குகள் அடிப்படையில் கடைசி இரண்டு இடங்களில் விக்ரம், அக்ஷயா ஆகியோர் உள்ளனர். ஒருவேளை டபுள் எவிக்‌ஷன் இந்த வாரம் இருந்தால் இவர்கள் இரண்டு பேர்தான் வெளியேற்றப்படுவார்கள் எனவும் இல்லையெனில் சிங்கிள் எவிக்‌ஷன் என்றால் அக்‌ஷயாதான் வெளியேறுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in