`தமிழ்ப் படங்களை குறை சொல்றேன்னு எழுதிடாதீங்க'- உதயநிதி ஸ்டாலின்

லிங்குசாமியின் ’தி வாரியர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ’புல்லட்’ பாடல் வெளியீட்டு விழா
லிங்குசாமியின் ’தி வாரியர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ’புல்லட்’ பாடல் வெளியீட்டு விழா

``நல்லப் படங்களை எந்த மொழியாக இருந்தாலும் தமிழ் மக்கள் ஓட வைப்பார்கள்'' என்று நடிகரும் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கும் படம், ’தி வாரியர்’. இந்தப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் ராம். கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். ஆதி வில்லனாக நடிக்கிறார். அக்‌ஷரா கவுடா, நதியா உட்பட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

பிருந்தாசாரதி வசனம் எழுதியுள்ளார். விவேகா பாடல்கள் எழுதியுள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ’புல்லட்’ என்ற முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. பாடலை வெளியிட்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி
ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி

உண்மையிலயே ’தி வாரியர்’ என்ற டைட்டில் யாருக்கு பொருந்து தோ, இல்லையோ, அது லிங்குசாமி சாருக்கு பொருந்தும். அவருடைய சிறந்த வெற்றிப் படமா இது இருக்கும்னு நம்பறேன். இந்தப் படத்து ஹீரோயின் கீர்த்தி ஷெட்டிக்கு தமிழ்த் தெரியாதுன்னு சொன்னாங்க, ஆனா, நீங்க லோக்கல்ல பேசற மாதிரி பேசறீங்க, விசில்லாம் அடிக்கறீங்க. பாலா சார் படத்துல நடிக்கிறீங்களே, அவர் டிரெயினிங்கா?

ராம் நடிச்ச படங்கள் ஏதும் பார்த்ததில்லை. தெலுங்குப் படங்கள் பார்க்கறதில்லை. இப்பதான், இந்த ’புஷ்பா’ பண்ணின வேலையால பார்க்க ஆரம்பிக்கிறேன். தமிழ் மக்கள், தமிழ்ப் படங்களை ஓட வைக்கிறாங்களோ இல்லையோ, நல்ல படங்களை, எந்த மொழியா இருந்தாலும் ஓட வச்சிடறாங்க. நான் தமிழ்ப் படங்களை குறை சொல்றேன்னு எழுதிடாதீங்க. நல்ல படங்களை தமிழ் மக்கள் கண்டிப்பாக ஓட வைப்பாங்க. நடிகர் ராம், இங்கயிருந்து தெலுங்குக்கு சென்றவர்தான். அவருக்கு வாழ்த்துகள்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in