வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது: மு.க.ஸ்டாலினாக நடிக்கிறார் சமுத்திரக்கனி?

வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது: மு.க.ஸ்டாலினாக நடிக்கிறார் சமுத்திரக்கனி?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து குயின் என்ற வெப் தொடரும், தலைவி என்கிற படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கையை மையமாக வைத்தும் திரைப்படம் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் கலைஞரின் மகனாக இருந்தாலும், அரசியலில் படிப்படியாக முன்னேறி முதல்வர் ஆனவர் ஸ்டாலின். இந்த நிலைக்கு வர அவர் பல்வேறு போராட்டங்களையும் சந்தித்துள்ளார். அவர் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்ததில் இருந்து தற்போது முதல்வர் ஆனது வரையிலான காலகட்டத்தில் அவர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட இருக்கிறதாம்.

இப்படத்தை பிரபல நடிகரும், கன்னி மாடம் படத்தின் இயக்குநருமான போஸ் வெங்கட் தான் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதில் மு.க.ஸ்டாலினாக நடிக்க சமுத்திரக்கனி ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.