செல்ஃபி எடுக்க மறுத்த தனுஷ் பட நாயகி: ரசிகர்கள் செய்த காரியத்தால் அதிர்ச்சி!

செல்ஃபி  எடுக்க மறுத்த தனுஷ் பட நாயகி: ரசிகர்கள் செய்த காரியத்தால் அதிர்ச்சி!

ஒரு கடை திறப்பு விழாவிற்காக வந்த நடிகை அனுபமா பரமேஸ்வரனுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுக்க முயன்றனர். ஆனால், கூட்ட நெரிசல் காரணமாக அவர் ஏறிய காரின் காற்றை ரசிகர்கள் பிடுங்கி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

'பிரேமம்' படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனுஷ் நடித்த 'கொடி' படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். இவர் ஏராளமான தெலுங்கு படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தெலங்கானாவில் ஒரு கடை திறப்பு விழாவிற்காக அனுபமா பரமேஸ்வரன் வந்தார். இதையறிந்த அவரது ரசிகர்கள் கடை முன்பு குவிந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. திறப்பு விழா முடிந்து வெளியே வந்த அனுபமாவுடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் முயன்றனர். ஆனால், கூட்ட நெரிசல் காரணமாக அனுபமா காரில் ஏறினார். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், அனுபமாவின் காரின் டயரில் இருந்த காற்றைப் பிடுங்கி விட்டனர். இதனால் கடை உரிமையாளர் அனுபமாவை கடைக்குள் அழைத்துச் சென்று பின்புறம் வழியாக வேறு காரில் அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in