அஜித்தின் மகளாக நடித்தவர் கதாநாயகியாகிறார்!

அஜித்தின் மகளாக நடித்தவர் கதாநாயகியாகிறார்!

'விஸ்வாசம்' படத்தில் அஜித்தின் மகளான நடித்த பேபி அனிகா தற்போது மலையாள திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

2015-ம் ஆண்டு வெளியான 'என்னை அறிந்தால்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அனிகா, இதன் பின்னர் 2019-ம் ஆண்டு 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான 'விஸ்வாசம்' படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். தற்போது அனிகா 'ஓ மை டார்லிங்' என்ற மலையாளப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. கொச்சியில் உள்ள கும்பளத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது.

அறிமுக நாயகன் ஆல்ஃபிரட் டி சாமுவேல் நடிக்கும் படத்தில் அனிகாவும் அறிமுகமாகிறார். தவிர முகேஷ், லீனா, விஜயராகவன், ஜானி ஆண்டனி, மஞ்சு பிள்ளை, ஸ்ரீகாந்த் முரளி, நந்து ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜினேஷ் கே ஜாய் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார். இதற்கு முன் ‘இஷ்க்’, ‘ஜோ அண்ட் ஜோ’ போன்ற படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் அன்சார் ஷா, இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in