`பாண்டியன் ஸ்டோர்ஸ்2’விலும் அதே கதாபாத்திரம்தான்... நடிகை கொடுத்த சூப்பர் அப்டேட்!

'பாண்டியன் ஸ்டோர்ஸ்2’
'பாண்டியன் ஸ்டோர்ஸ்2’
Updated on
1 min read

’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இரண்டாம் பாகத்திலும் முதல் பாகத்தில் நடித்த கதாபாத்திரத்திலேயே நடிக்க இருப்பதாக ஹேமா சொல்லி இருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் புகழ்பெற்ற ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் முதல் பாகம் முடிவு பெற்றிருக்க அதன் இரண்டாம் பாகம் இன்று முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் முதல் பாகத்தில் நடித்திருந்த ஸ்டாலின் மட்டுமே இரண்டாம் பாகத்தில் தொடர்கிறார். மற்ற நடிகர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில், முதல் பாகத்தில் மீனா கதாபாத்திரத்தில் கலக்கிய ஹேமா இரண்டாம் பாகத்தில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இதுகுறித்து இன்னும் உறுதியாகவில்லை என ஹேமா தெரிவித்திருந்த நிலையில், தற்போது தான் இரண்டாம் பாகத்தில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

முதல் பாகத்தில் நடித்த மீனா கதாபாத்திரத்திலேயே இந்த இரண்டாம் பாகத்திலும் தான் தொடர்வதாகவும் தனக்கு அதேபோன்று ஆதரவைத் தருமாறும் ஹேமா கூறியிருக்கிறார். முதல் பாகத்தில் நடித்த வெங்கட், விஜய் டிவியின் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் பிஸியாக இருக்க, குமரன் தான் சினிமாவில் நடிக்க முயற்சி எடுப்பதால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்2’வில் தொடரவில்லை எனக் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in