நடிகர் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் பாலியல் புகாரில் சிக்கிய நடிகர்: தமிழ் திரையுலகில் சலசலப்பு

நடிகர் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில்  பாலியல் புகாரில் சிக்கிய நடிகர்: தமிழ் திரையுலகில் சலசலப்பு

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் நடிப்பது சர்ச்சையாகியுள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆக.22-ம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு சென்னை ராயப்பேட்டையில் உள்ள பழைய உட்லண்ட்ஸ் ஹோட்டலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கின்றனர்.

மேலும் இந்த படத்தில் மலையாள வில்லன் நடிகர் விநாயகம் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. விஷால் நடித்த 'திமிரு' , சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்', தனுஷ் நடித்த 'மரியான்' உள்ளிட்ட பல படங்களில் விநாயகம் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சில பெண்கள் அளித்த புகாரின் பேரில் பாலியல் புகாரில் விநாயகம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது, நான் இதுவரை பல பெண்களுடன் உறவு வைத்துள்ளேன். அவர்களின் சம்மதத்தின் பேரில் உறவு வைத்துக்கொள்வேன் எனக்கூறி சர்ச்சையில் சிக்கினார். இதனால் இவரை தமிழ் படங்களில் நடிக்க இயக்குநர்கள் தயங்கி வந்தனர்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிகர் விநாயகம் நடிப்பது தமிழ் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in