'ஏகப்பட்ட இஎம்ஐயில் நாடே கிடக்கு': தெறிக்க விடும் 'துணிவு' படத்தின் 2வது சிங்கிள்

'ஏகப்பட்ட இஎம்ஐயில் நாடே கிடக்கு': தெறிக்க விடும் 'துணிவு' படத்தின் 2வது சிங்கிள்

நடிகர் அஜித் நடித்த 'துணிவு' படத்தின் 'காசேதான் கடவுளடா' பாடல் இன்று வெளியாகியுள்ளது

நடிகர் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

'துணிவு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான 'சில்லா சில்லா' வெளியானது. ஜிப்ரான் இசையில் அனிரூத் பாடியிருந்த இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 'துணிவு' படத்தின் 2-வது பாடல் 'காசேதான் கடவுளடா' இன்று வெளியாகியுள்ளது.

'ஏகப்பட்ட இஎம்ஐயில் நாடே கிடக்கு' என்று அரசியல் பேசும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த பாடலை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இப்பாடலை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in