திருமண ஏற்பாடு உண்மையா?: நடிகை தமன்னா கொடுத்த விளக்கம்

திருமண ஏற்பாடு உண்மையா?: நடிகை தமன்னா  கொடுத்த விளக்கம்

பிரபல நடிகை தமன்னாவிற்கும், மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது எனச் சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த தகவல் குறித்து தமன்னா விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2005-ம் ஆண்டு இந்தி படத்தில் அறிமுகமான நடிகை தமன்னா, அதே ஆண்டு தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 2006-ம் ஆண்டு 'கேடி' படத்தின் மூலம் தமிழில் அவர் அறிமுகமானார். மும்பையைச் சேர்ந்த நடிகை தமன்னா, நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இடைப்பட்ட காலத்தில் வாய்ப்பு இல்லாமல் இருந்த தமன்னா, 'பாகுபலி' படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

தனது பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையையே திருமணம் செய்து கொள்வேன் என்று ஏற்கெனவே அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமன்னாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகச் சமீபத்தில் தகவல் வெளியானது. அவரது பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரை அவர் திருமணம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியது.

மேலும் இதுகுறித்து தமன்னா அறிவிப்பு வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்குத் திருமணம் என வெளியான தகவல் முற்றிலும் வதந்தி எனப் பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in