`விமர்சனங்களுக்கு நன்றி’- `கனெக்ட்’ படம் பற்றி நயன்தாரா!

`விமர்சனங்களுக்கு நன்றி’- `கனெக்ட்’ படம் பற்றி நயன்தாரா!

‘கனெக்ட்’ பட விமர்சனங்களுக்கு நன்றி தெரிவித்து நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா, சத்யராஜ், வினய் ஆகியோர் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானத் திரைப்படம் ‘கனெக்ட்’. படத்தை இயக்குநர் விக்னேஷ்சிவன், நயன்தாராவின் ‘ரெளடி பிக்சர்ஸ்’ தயாரித்து இருந்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், நயன்தாரா தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நிறைய நிகழ்வுகள் நல்ல விதமாக எனக்கு இந்த வருடம் நடந்திருக்கிறது. அதற்கு நன்றி. ‘கனெக்ட்’ படத்தைப் பார்த்து நீங்கள் காட்டிய அன்புக்கும் இப்போது வரை மீண்டும் மீண்டும் படம் பார்த்து வருபவர்களுக்கும் நன்றி. கூடுமானவரை இந்தப் படத்தில் நாங்கள் எடுத்துக் கொண்ட களத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் முயற்சி செய்து நம்பிக்கையுடனும் நேர்மையுடனும் இதைக் கொடுத்துள்ளோம்.

இந்தக் கதை மீதும் என் மீதும் நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பு கொடுத்த அஷ்வின் சரவணனுக்கும் அவரது குழுவுக்கும் நன்றி. உங்களுடைய ஃபிலிம் மேக்கிங் உலகத் தரமாக உள்ளது. அதில் நான் இணைந்ததில் மகிழ்ச்சி. என் தயாரிப்பாளர் விக்னேஷ்சிவன், எங்களது கனவு ‘ரெளடி பிக்சர்ஸ்’ நிறுவனத்திற்கும் எனது அன்பும் நன்றியும்.

சிறந்த முறையில் தயாரித்து, விநியோகித்து எங்கள் படத்திற்கு துணை நின்றதிற்கும் நன்றி. படம் பார்த்து நீங்கள் அனைவரும் தந்த அன்பு, ஆதரவு, விமர்சனம் அனைத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இவை அனைத்தையும் நாங்கள் வரும்காலத்தில் சிறந்த வகையில் கற்றுக் கொள்வதற்கான முயற்சியாக எடுத்துக் கொள்கிறோம். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்’ எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in