மீராவுக்கு நான் தான் பதவி பிரமாணம் செய்து வைத்தேன்; தமிழச்சி தங்கபாண்டியன் உருக்கம்! வைரலாகும் வீடியோ!

மீரா விஜய் ஆண்டனி
மீரா விஜய் ஆண்டனி

மீரா விஜய் ஆண்டனிக்கு நான் தான் பள்ளியில், பதவி பிரமாணம் செய்து வைத்தேன் என தமிழச்சி தங்க பாண்டியன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா எதிர்பாராத விதமாக இன்று தற்கொலை செய்து கொண்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குஷ்பு, பாரதிராஜா, உதயநிதி, மன்சூர் என பல பிரபலங்களும் விஜய் ஆண்டனி குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் மீராவை பற்றி நெகிழ்வான நினைவு ஒன்றை தற்போது பகிர்ந்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இசையமைப்பாளரும், நடிகருமான திரு.விஜய் ஆண்டனியின் மகள் மீரா மரணம் அடைந்த செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். கடந்த, ஜூன் மாதம், சென்னை - சர்ச் பார்க் பள்ளியில் நடந்த மாணவர் தலைவர்களுக்கான பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு, கலைநிகழ்ச்சி குழுவின் தலைவராக மீராவுக்கு நான் தான் பதவி பிரமாணம் செய்து வைத்தேன்.

துடிப்பும், சுறுசுறுப்பும், ஆர்வமும் நிறைந்த பெண்ணாயிருந்த மீராவின் இந்த முடிவு, மிகுந்த மன வேதனையை அளிக்கின்றது. அவரை இழந்து வாடும், அவரது தந்தை திரு.விஜய் ஆண்டனி, குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும்’ எனக் கூறியுள்ளார்.

பேட்மிட்டன் விளையாட்டில் தீவிர ஆர்வம் கொண்ட சுட்டிக் குழந்தையான மீரா, தமிழச்சி தங்கபாண்டியன் குறிப்பிட்ட அந்த நிகழ்விற்கான காணொலியை பாத்திமா விஜய் ஆண்டனி முன்பு பகிர்ந்திருந்தார். அதையும் தற்போது ரசிர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in