'தல' தயாரிப்பில் தளபதியின் 70-வது படம்?: ரசிகர்கள் மகிழ்ச்சி

'தல' தயாரிப்பில் தளபதியின் 70-வது படம்?: ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் விஜய் நடிக்கும் 70-வது படத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. ,இவர் கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக 'தல' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர், இப்போது தோனி என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இவர் நிறுவனம் சார்பில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தைத் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் விஜய் தற்போது 'வாரிசு' படத்தில் நடித்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் தோனி மற்றும் விஜய் இருவரும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனம் விஜயின் 70- வது படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இது தோனி, விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in