`இது மறக்க முடியாத நாள்'- `பீஸ்ட்’ டீமுக்கு விருந்து வைத்த விஜய்யால் நெகிழ்ந்த நெல்சன்!

`இது மறக்க முடியாத நாள்'- `பீஸ்ட்’ டீமுக்கு விருந்து வைத்த விஜய்யால் நெகிழ்ந்த நெல்சன்!

’பீஸ்ட்’ படக்குழுக்கு நடிகர் விஜய் விருந்து வைத்துள்ளார். அதற்கு இயக்குநர் நெல்சன் நன்றி தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்த ’பீஸ்ட்’ படம் கடந்த 13-ம் தேதி ரிலீஸ் ஆனது. செல்வராகவன், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசை அமைத்திருந்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை அள்ளியதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், ’பீஸ்ட்’ படக்குழுவுக்கு நடிகர் விஜய் சமீபத்தில் விருந்து வைத்துள்ளார். இதில் நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் நெல்சன், விடிவி கணேஷ், அனிருத், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, சன் நெட்வொர்க் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். இதுபற்றிய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் நெல்சன், நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்களுக்காக விருந்து வைத்ததற்கு நன்றி. பீஸ்ட் குழுவுக்கு இது மறக்க முடியாத மாலையாக அமைந்திருக்கிறது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. உங்களுடன் பணியாற்றியதை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன். இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்கும் படத்தை ஒருங்கிணைத்ததற்கும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், காவ்யா மாறன் ஆகியோருக்கும் நன்றி. அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினர் இல்லாமல் இது சாத்தியமில்லை. அவர்களுக்கும் அன்பையும் ஆதரவையும் தந்த ரசிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.