தாய்லாந்தில் `தளபதி 68’... ஷூட் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

 ‘தளபதி 68’
‘தளபதி 68’

நடிகர் விஜய் நடித்து வரும் ‘தளபதி 68’ படம் குறித்து முக்கிய அப்டேட்டை அதன் தயாரிப்பாளர் பகிர்ந்துள்ளார்.

’லியோ’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் பூஜை வீடியோ வெளியானது. நடிகர்கள் பிரபுதேவா, லைலா, சிநேகா, மோகன், ஜெயராம் என பல நட்சத்திரங்கள் இதில் இணைந்துள்ளனர். இதற்கு முன்பு அமெரிக்காவில் இதன் லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டது. பின்பு முதற்கட்டப் படப்பிடிப்பில் சில ஆக்‌ஷன் காட்சிகளும், பிரபுதேவா நடன அமைப்பில் ஒரு பாடல் படமாக்கப்பட்டது. இந்த நிலையில், படக்குழு தற்போது தாய்லாந்தில் படப்பிடிப்பிற்காக சென்றுள்ளது.

இயக்குநர் வெங்கட்பிரபுவின் பிறந்தநாளை ஒட்டி வாழ்த்து தெரிவித்து அவருடன் எடுத்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ‘தாய்லாந்தில் பெரிய ஆக்‌ஷன் காட்சி தற்போது படமாக்கப்பட்டுள்ளது. நேற்று முழுக்க நைட் ஷூட். அதனால், வெங்கட்பிரபு தன்னுடைய பிறந்தநாள் அன்று விடுமுறை எடுத்துள்ளார்’ எனக் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in