காஷ்மீரில் `தளபதி 67’ சூட்டிங்: நடிகைகளுடன் தனி விமானத்தில் சென்றார் நடிகர் விஜய்!

சென்னை விமான நிலையத்தில் நடிகர் விஜய் & லோகேஷ் கனகராஜ்
சென்னை விமான நிலையத்தில் நடிகர் விஜய் & லோகேஷ் கனகராஜ்காஷ்மீரில் `தளபதி 67’ சூட்டிங்: நடிகைகளுடன் தனி விமானத்தில் சென்றார் நடிகர் விஜய்!

நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 67’ படக்குழு படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றுள்ளது.

’மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் ‘தளபதி 67’ படத்தில் இணைந்துள்ளார். படத்திற்கான புரோமோ ஷூட் இந்த மாதம் எடுத்து முடித்திருக்கிறார்கள். ஜனவரி மாதத்தில் இருந்தே இதற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், இன்று தனி விமானம் மூலமாக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது. விமானத்தின் படக்குழு நுழையும் முகப்பு வாயிலில் ‘67’ மற்றும் டிக்கெட்டிலும் ‘தளபதி 67’ என குறிக்கப்பட்டு இருக்கும்படியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இதனை உறுதி செய்து படக்குழு குறித்தான விவரத்தையும் தயாரிப்பு தரப்பு நேற்று மாலை வெளியிட்டது. நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் செல்லும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுமட்டுமல்லாமல், அவர்கள் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமான இணையத்தளத்தில் நடிகர்கள் ப்ரியா ஆனந்த், த்ரிஷா மற்றும் சத்யராஜ் ஆகியோரது பெயர்களும் இருந்ததால் அவர்களும் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே, இயக்குநர் கெளதம் வாசுதேமேனன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in