'தளபதி 67’ படப்பிடிப்பு தொடங்கியது: விவரம் என்ன?

'தளபதி 67’ படப்பிடிப்பு தொடங்கியது: விவரம் என்ன?

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் ‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது.

‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜய்யுடன் அவரது 67-வது படத்தில் இணைந்திருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. ’மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு இந்த இணை மீண்டும் இணைந்திருப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் இதன் பூஜை நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பு நேற்று தொடங்கி இருக்கிறது. நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் தற்போது பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் அதற்கு பிறகே இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

’தளபதி 67’ படத்தில் நடிகர் மனோபாலாவும் இருக்கிறார். முதல்நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டது குறித்தும், படப்பிடிப்பு தொடங்கியது குறித்தும் விஜய்யை பார்த்த மகிழ்ச்சியையும் அவர் பகிர்ந்திருந்தார். தற்போது ஒரு வாரம் படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் பிறகு பொங்கல் விடுமுறைக்கு அடுத்து மீண்டும் சில நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு முடித்த பிறகு, பிப்ரவரி மாதம் படக்குழு ஜம்மு காஷ்மீர் செல்ல இருக்கிறது. இந்தப் படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார் என சொல்லப்படும் நிலையில் வில்லனாக கெளதம் வாசுதேவ் மேனனும், மன்சூர் அலிகானும் தாங்கள் இந்தப் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in