ஒருவர் ராஷ்மிகா மந்தனா... இன்னொரு ஹீரோயின் யார்?- விஜய் 66 படத்தின் அடுத்த சீக்ரெட்

ஒருவர் ராஷ்மிகா மந்தனா... இன்னொரு ஹீரோயின் யார்?- விஜய் 66 படத்தின் அடுத்த சீக்ரெட்

விஜய் 66 படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

’பீஸ்ட்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 66-வது படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். இவர் கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் உருவான, ’தோழா’ படத்தை இயக்கியவர். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மற்றும் நடிகர் ஷாம், சரத்குமார், பிரபு உட்பட பலர் நடிக்கின்றனர்.

தமன் இசை அமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே நடிகர் விஜய், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை சந்தித்துப் பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயின் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தில் விஜய் இரண்டு கேரக்டரில் நடிக்கிறார் என்றும் ஒரு கேரக்டருக்கு ராஷ்மிகா ஹீரோயின் என்றும் மற்றொரு கேரக்டருக்கு வேறு ஹீரோயினை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in