'தலைநகரம்-2' படப்பிடிப்பு தொடக்கம்

’தலைநகரம்-2’ பூஜை
’தலைநகரம்-2’ பூஜை

2006-ம் வருடம் சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.சி, வடிவேலு, ஜோதிர்மயி நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த திரைப்படம் ‘தலைநகரம்’. தற்போது இத்திரைப்படத்தின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சுந்தர்.சி நடிப்பில் ‘இருட்டு’ திரைப்படத்தை இயக்கிய V.Z.துரை, இத்திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை ‘ரைட் ஐ தியேட்டர்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக V.Z.துரை,எஸ்.எம். பிரபாகரன் ஆகியோர் தயாரிக்க உள்ளார்கள்.

V.Z.துரை - சுந்தர்.சி
V.Z.துரை - சுந்தர்.சி

மேலும், துரை தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். இவரின் இயக்கத்தில் அமீர் நடிப்பில் 'நாற்காலி' என்ற திரைப்படம் தயாராகி வெளிவராமலிருக்கும் நிலையில், தற்போது ‘தலைநகரம்-2’ படப்பிடிப்பைப் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in