`துணிவு' படம் ஓடிக்கொண்டிருந்தபோது தியேட்டரை அடித்து நொறுக்கிய போதை ஆசாமி: அதிரடி காட்டிய ரசிகர்கள்

`துணிவு' படம் ஓடிக்கொண்டிருந்தபோது தியேட்டரை அடித்து நொறுக்கிய போதை ஆசாமி: அதிரடி காட்டிய ரசிகர்கள்

`துணிவு' படம் ஓடிக்கொண்டிருந்தபோது தியேட்டருக்குள் திடீரென புகுந்த ரசிகர்கள் அங்கிருந்த பைக், சேர்களை அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ள தனியார் திரையரங்கில் நேற்று முன்தினம் அஜித்தின் `துணிவு' படம் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது திரையரங்கிற்குள் நுழைந்த போதை ஆசாமி, திடீரென அங்கிருந்த வாகனங்களை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனை தியேட்டர் ஊழியர்கள் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி திடீரென ஊழியர்களை சரமாரியாக தாக்கத்தொடங்கினார். பின்னர் திரையரங்கிற்கு உள்ளே நுழைந்து அங்கிருந்த சேர்களை தரையில் அடித்து உடைத்தார்.

தொடர்ந்து ஒரு மணி நேரமாக அப்பகுதியில் ரகளை ஈடுபட்டதால் இதனைப் பார்த்த அங்கிருந்த ரசிகர்கள் அவரை அடித்து உதைத்து கட்டி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் சங்கரன்கோவில் லட்சுமியாபுரத்தை சேர்ந்த கருப்பசாமி என்பது தெரியவந்தது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தியேட்டருக்குள் மதுபோதையில் ஒருவர் புகுந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in