தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தை மரணம்: குடும்பத்தில் ஒரே ஆண்டில் 3 பேர் உயிரிழந்த சோகம்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தை மரணம்: குடும்பத்தில் ஒரே ஆண்டில் 3 பேர் உயிரிழந்த சோகம்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த ஆண்டில் மட்டும் மகேஷ் பாபு வீட்டில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் கிருஷ்ணா. இவர் 350 படங்களில் நடித்துள்ளார். இவரது மகன் மகேஷ் பாபு தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். 80 வயதான கிருஷ்ணா இன்று அதிகாலை ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மகேஷ் பாபுவின் சகோதரரும் நடிகருமான ரமேஷ் பாபு (56) கடந்த ஜனவரி 8-ம் தேதி இறந்தார். இதையடுத்து, மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி உடல்நல பாதிப்பால் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி உயிரிழந்தார். தற்போது அவரது தந்தையும் உயிரிழந்துள்ளார். ஒரே ஆண்டில் குடும்பத்தில் 3 பேரை நடிகர் மகேஷ் பாபு இழந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in