தமிழுக்கு வருகிறார் நாக சைதன்யா?

தமிழுக்கு வருகிறார் நாக சைதன்யா?

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா. தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாக சைதன்யா, தமிழில், ’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பில் நாயகனாக நடித்திருந்தார்.

நடிகை சமந்தாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா, கடந்த வருடம் அவரைப் பிரிந்தார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேரடி தமிழ்ப் படத்தில் நாக சைதன்யா நடிக்க இருக்கிறார். இதை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நாக சைதன்யா
நாக சைதன்யா

குடும்பப் பின்னணி கொண்ட பீரியட் கதை ஒன்றை வெங்கட் பிரபு சொன்னதாகவும் அது பிடித்ததை அடுத்து, நாக சைதன்யா சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறாராம்.

லிங்குசாமியின் ’வாரியர்’ படத்தைத் தயாரிக்கும் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம், இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறது என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.