பப்ளிக் ஷாக் ... நடிகையின் புடவையை இழுத்து நடிகர் செய்த காரியம்!

’கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி’ பட புரமோஷன்
’கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி’ பட புரமோஷன்

நடிகையின் புடவையை இழுத்து நடிகர் நடனமாடி படத்திற்கு புரமோஷன் செய்ததை ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.

திரைப்படத்தின் புரமோஷன் என்ற நிலையில், நடிகையின் புடவையை மேடையில் இழுத்து நடனம் ஆடியுள்ள வீடியோவுக்கு ரசிகர்கள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கில் நடிகர்கள் விஷ்வாக் சென், நேஹா ஷெட்டி ஆகிய இருவரது நடிப்பில் ‘கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி’ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் இருந்து ’சுட்டம்லா சூசி’ என்ற பாடல் வெளியானது.

இந்தப் பாடலில் இடம் பெற்றிருந்த நடன அசைவுகளை படத்தின் புரமோஷனுக்காக மேடையில் அப்படி ஆடியுள்ளனர் விஷாவாக் சென்னும் நேஹாவும். இதுதான் ரசிகர்களை முகம்சுளிக்க வைத்துள்ளது.

'குஷி’ படத்தின் மியூசிக்கல் கான்செர்ட் என விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் நடனம் ஆடியது ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த டிரெண்டை ஃபாலோ செய்தே இவர்களும் படத்திற்கு இப்படியான டிரெண்டை செய்துள்ளனர். ஆனால், இது எல்லை மீறி முகம்சுளிக்க வைக்கும் விதமாக உள்ளது என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in