மதுபோதையில் கார் ஓட்டி விபத்து: நடிகர் கைது

தாசரி அருண்குமார்
தாசரி அருண்குமார்

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக, தெலுங்கு நடிகர் தாசரி அருண்குமார் கைது செய்யப்பட்டார்.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் இயக்குநருமான தாசரி நாராயண ராவின் மகன் தாசரி அருண்குமார். சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு, மதுபோதையில் ஹைதராபாத் பஞ்சராஹில்ஸ் பகுதியில் காரில் வேகமாக வந்துள்ளார். சையத் நகர் அருகில் வந்தபோது, சையது அப்சல் அலி என்பவருடைய இருசக்கர வாகனம் உட்பட சிலருடைய இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

இதில் நான்கைந்து வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. இதையடுத்து சையது அப்சல் அலி உட்பட சிலர் பஞ்சராஹில்ஸ் போலீஸில், அருண்குமார் மீது புகார் செய்தனர். வழக்குப் பதிவு செய்த போலீஸார், தாசரி அருண்குமாரை அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in