விவாகரத்து கோரி பிரபல இயக்குநரின் மனைவி மனு!

விவாகரத்து கோரி பிரபல இயக்குநரின் மனைவி மனு!

பிரபல இயக்குநரின் மனைவி விவாகரத்துக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர் ஸ்ரீனு வைட்லா. ரவிதேஜா நடித்த ‘நீ கோசம்’ என்ற படம் மூலம் இயக்குநரான அவர், ஆனந்தம், வெங்கி, அந்தரிவாடு, தீ, துபாய் சீனு, ரெடி, கிக், தூக்குடு, ஆகடு உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். ஆக்‌ஷன், காமெடி படங்களை அதிகமாக இயக்கியுள்ள இவருடைய ’ரெடி’ படம் தமிழில், உத்தமபுத்திரன் என்ற பெயரில் ரீமேக் ஆனது.

ஸ்ரீனு வைட்லா, ரூபா
ஸ்ரீனு வைட்லா, ரூபா

சில சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள இவருடைய மனைவி ரூபா, திரைப்படங்களில் காஷ்ட்யூம் டிசைனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த நான்கு வருடங்களாக ஸ்ரீனு வைட்லாவும் ரூபாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஹைதராபாத் நம்பள்ளி குடும்ப நல நீதிமன்றத்தில், விவாகரத்து கோரி ரூபா மனுதாக்கல் செய்துள்ளார். பிரபல இயக்குநரின் மனைவி, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in