இந்து கடவுள்களை அவமதித்ததாக நடிகை கைது!

சரயு ராய்
சரயு ராய்

இந்து கடவுள்களை அவமதித்ததாக பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகை சரயு ராய். ‘தொல்லி பரிச்சயம்’, ’கர்பூல்’, ’3 ரோசஸ்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் அதிகம் பிரபலமடைந்தார். நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருக்கும் இவர், யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

இதில் அடிக்கடி சர்ச்சைக் கருத்துகளைப் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட யூடியூப் வீடியோவில், இந்து மதக் கடவுள்களையும் நம்பிக்கைகளையும் கிண்டல் செய்திருந்தாராம். ஓட்டல் ஒன்றின் திறப்பு விழா குறித்த இந்த யூடியூப் நிகழ்ச்சி பரபரப்பானது.

இதுபற்றி தெலங்கானா மாநிலம் சிர்சிலா மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஜபுரி அசோக் என்பவர் போலீஸில் புகார் செய்தார்.

பின்னர் இந்த வழக்கு ஐதராபாத் பஞ்சராஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது. விசாரித்த போலீசார், நடிகை சரயுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். நடிகை சரயு கைது செய்யப்பட்டிருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in