லியோவிற்கு போட்டியாக 'பகவந்த் கேசரி' ரிலீஸ்... கட் அவுட்டுக்கு மது அபிஷேகம்!

மது அபிஷேகம் செய்யும் ரசிகர்கள்
மது அபிஷேகம் செய்யும் ரசிகர்கள்

தெலுங்கில் இன்று வெளியாகியுள்ள 'பகவந்த் கேசரி' திரைப்படத்தின் நாயகன் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் கட் அவுட்டிற்கு அவரது ரசிகர்கள் மது அபிஷேகம் செய்துள்ளது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

நடிகர் பாலகிருஷ்ணா
நடிகர் பாலகிருஷ்ணா

தெலுங்கில் புகழ்பெற்ற முன்னணி நடிகரான பாலகிருஷ்ணாவின் 108-வது திரைப்படமாக 'பகவந்த் கேசரி' திரைப்படம்  உருவாகியுள்ளது.  இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். காஜல் அகர்வால், ஸ்ரீலீலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷைன்ஸ் ஸ்கீரின் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தமன் இசையமைத்துள்ள இத்திரைப்படம் விஜய்யின் 'லியோ' படத்திற்குப் போட்டியாக இன்று வெளியாகியுள்ளது.

பாலகிருஷ்ணாவின் ரசிகர்களுக்காகவே பஞ்சு வசனங்களும் ஆக்சன் காட்சிகளும் இப்படத்தில் அணிவகுத்துள்ளன. “மகளுக்கு முன் தந்தை நிற்பது அனைத்து கடவுள்களும் ஒன்று சேர்ந்து நிற்பது போல” என்ற வசனம் படம் அப்பா - மகளுக்கானது என்பதை உறுதி செய்கிறது.

நடிகர் பாலகிருஷ்ணா
நடிகர் பாலகிருஷ்ணா

தந்தை - மகள் சென்டிமென்ட் இடம்பெறும் என்பதால் கதை, சென்டிமென்ட், ஆக்‌ஷன், மாஸ் என வெகுஜன சினிமாவாக ‘பகவந்த் கேசரி’ உருவாகியிருக்கிறது. இப்படத்தில் சரத்குமார், ஸ்ரீலீலா, பிரியங்கா ஜவால்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்த படம் இன்று காலை தெலங்கானா மற்றும் ஆந்திராவில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. திரையரங்குகளில் அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வைசாக்கில் உள்ள  சங்கம் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த அவரது கட் அவுட்டுக்கு  ரசிகர்கள் மதுவால் அபிஷேகம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் இது பலராலும் கண்டிக்கப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in