'அஜித் 61’ படத்தில் இணைந்த தெலுங்கு வில்லன்!

'அஜித் 61’ படத்தில் இணைந்த தெலுங்கு வில்லன்!

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் தெலுங்கு வில்லன் நடிகர் இணைந்துள்ளார்.

`வலிமை’ படத்தை அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் அஜித்குமார். ‘AK 61’ என்று தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அஜித், இரண்டு கேரக்டரில் நடிப்பதாகவும் ஒன்று நெகட்டிவ் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. இதில் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் நடித்த ஜான் கொக்கென், வீரா, யோகிபாபு, மகாநதி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். அஜித் ஜோடியாக, மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

அஜய்
அஜய்

படத்துக்காக, வங்கி மற்றும் சென்னை மவுன்ட் ரோட் செட் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டு அங்கு படப்பிடிப்பு நடந்து வந்தது. அந்த ஷெட்யூல் முடிவடைந்து விட்டது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு புனேவில் நடக்க இருக்கிறது. நடிகர் அஜித்குமார் இப்போது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அங்கு அவர் நண்பர்களுடன் சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் இந்தப் படத்தில் தெலுங்கு வில்லன் அஜய் இணைந்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கில் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளர். சமீபத்தில் வெளியான ’தி வாரியர்’ படத்திலும் அஜய் நடித்துள்ளார். புனேவில் தொடங்கும் படப்பிடிப்பில் அவர் இணைவார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், ரிலீஸ் தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in