பிராண்டட் உடைகளை வாங்க பணமில்லை... நடிகையை விளாசும் நெட்டிசன்கள்!

தேஜஸ்வி பிரகாஷ்
தேஜஸ்வி பிரகாஷ்

விலையுயர்ந்த பிராண்டட் உடைகளை வாங்கத் தன்னிடம் பணம் இல்லை என நடிகை தேஜஸ்வி பிரகாஷ் கூறியிருக்கிறார். இதனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

’நாகினி6’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் நடிகை தேஜஸ்வி பிரகாஷ். இவர் இந்தி பிக் பாஸின் 15-வது சீசனில் பங்கேற்றார். தேஜஸ்வி ஆடி க்யூ 7 கார் வாங்கினார். கோவாவில் ஒரு பிளாட் வாங்கினார். பின்னர் தனது நீண்ட நாள் காதலரான கரண் குந்த்ராவுடன் சேர்ந்து சமீபத்தில் துபாயில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கினார்.

காதலருடன் தேஜஸ்வி பிரகாஷ்
காதலருடன் தேஜஸ்வி பிரகாஷ்

இதனால், சின்னத்திரை வட்டாரத்தில் சொகுசான நடிகையாக வலம் வருகிறார் தேஜஸ்வி. இப்படியான சூழ்நிலையில்தான் ​​பிராண்டட் ஆடைகளை வாங்குவதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று அவர் சொல்லியிருப்பதற்கு நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

இதுகுறித்து நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தேஜஸ்வி பிரகாஷ், “நான் பிராண்ட் குறித்து பெரிதாக கவலைப்படுபவள் கிடையாது. இவற்றில் பெரும்பாலான பிராண்டு உடைகளை என்னால் வாங்க முடியாது என்பதே இதற்குப் பின்னால் உள்ள ஒரு காரணம் என்று நினைக்கிறேன். நிறைய நல்ல பிராண்டுகள் நன்றாகவே நீடிக்கும். அதை மட்டுமே நான் வாங்குவேன்.

தேஜஸ்வி பிரகாஷ்
தேஜஸ்வி பிரகாஷ்

பிரபல பிராண்ட் பொருட்களும் உடைகளும் என்னிடம் இருக்கிறது என ‘ஷோ’ காட்ட எதையும் வாங்க மாட்டேன். அதனால் தான், நான் நீண்ட காலமாக ஒரே ஹேண்ட் பேக் வைத்திருக்கிறேன்” என்றார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் இவரைக் கடுமையாகத் திட்டித் தீர்த்து வருகின்றனர். ‘துபாய், கோவாவில் வீடு வாங்க முடிகிறது. ஆனால், பிராண்ட் துணிகள் வாங்க இவரிடம் காசு இல்லையா?’ என்று கேட்டு விளாசி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!

கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது... டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in