நள்ளிரவு சிறையில் கதறிய டிடிஎஃப் வாசன்… ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி!

நள்ளிரவு சிறையில் கதறிய டிடிஎஃப் வாசன்… ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிடிஎஃப் வாசன், நள்ளிரவு இடுப்பு வலிப்பதாக கதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிவேகமாக பைக் ஓட்டி அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் டிடிஎஃப் வாசன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் அருகே பைக்கில் வீலிங் செய்ய முயன்று பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டார்.

அந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் கை கட்டுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் புழல் சிறையில் நள்ளிரவு தனக்கு முதுகு வலிக்கிறது, இடுப்பு வலிக்கிறது என்று காவலர்களிடம் கூறி அவர் கதறியுள்ளார்.

இதையடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் உடல்நலன் பாதிக்கப்பட்டவரைப் போல் டிடிஎஃப் வாசன் நடந்து கொள்ளவில்லை, கேமராவை பார்த்த உடன் சிரித்து போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், கடந்த சில நாட்களாக கையில் கட்டுடன் வலம் வந்த டிடிஎஃப் வாசன், கை கட்டு இல்லாமல் போலீஸாரை பின் தொடர்ந்து செல்லும் காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே சிறை தண்டனையை அனுபவிக்க பயந்து டிடிஎஃப் வாசன் நாடகமாடுவதாக ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in