காமெடி படத்தில் சந்தானம் ஜோடியாக தன்யா ஹோப்

காமெடி படத்தில் சந்தானம் ஜோடியாக தன்யா ஹோப்

நடிகை தன்யா ஹோப் புதிய படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல கன்னட நடிகை தன்யா ஹோப். இவர் தமிழில், அருண் விஜய் ஜோடியாக `தடம்' படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து ஜீவா, மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகும் `கோல்மால்' படத்தில் நடித்துள்ளார். காமெடி படமான இதன் ஷூட்டிங் மொரிசியஷில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து சந்தானம் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

தன்யா ஹோப்
தன்யா ஹோப்

கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ், இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. இதில் நடிப்பது பற்றி தன்யா ஹோப் கூறும்போது, ``இது நான் நடிக்கும் இரண்டாவது காமெடி படம். இதற்கு முன்பு காமெடி படங்களில் நடித்ததில்லை. ஆனால், `கோல்மால்' படம், காமெடி வேடத்தில் நடிக்க உதவியது.

இப்போது மீண்டும் காமெடி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த காலகட்டத்தில் மக்களுக்கு காமெடி தேவை என்று நினைக்கிறேன். இதன் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தாய்லாந்தில் தொடங்க இருக்கிறது'' என்றார்.

நடிகை தன்யா ஹோப், சுந்தர் சி.யுடன் நடித்துள்ள வல்லான், விமலுடன் நடித்துள்ள `குலசாமி' ஆகிய படங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in