
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம் வரும் 19-ம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கெனவே இப்படத்தின் டிரைலர் கடந்த அக்டோபர் 5-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. விஜயின் புதிய தோற்றத்தையும், படத்தின் ஆக்ஷன் காட்சிகளையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஆண்டு பொங்கல் சமயத்தில் வெளியான 'துணிவு' படத்தின் சிறப்பு காட்சியின் போது ரசிகர் ஒருவர் உயிரிழந்தார். இதன் காரணமாக தமிழக அரசு திரையரங்களில் சிறப்பு காட்சிக்கான அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டது. இதன் காரணமாக ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற 'ஜெயிலர்' படமும் சிறப்பு காட்சிகள் இன்றியே வெளியானது.
இந்நிலையில், ரசிகர்களிடையே 'லியோ' படத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ், லியோ படத்தினை அதிகாலைக் காட்சிகளில் வெளியிட வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.
இந்நிலையில், படம் வெளியாகும் அக்டோபர் 19-ம் தேதி அதிகாலை 4 மணிக் காட்சிக்கும், அக்டோபர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 24-ம் தேதி வரை காலை 7 மணிக் காட்சிக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் விஜயை தளபதி விஜய் என குறிப்பிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!
வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!
ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!
உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!