அடி தூள்... ரசிகர்கள் கொண்டாட்டம்... 'லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி!

’லியோ’ விஜய்
’லியோ’ விஜய்

’லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘லியோ’. இந்த மாதம் 19ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்குமாறு படக்குழு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது. இதனை அடுத்து, ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

’லியோ’ படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய அரசாணை...
’லியோ’ படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய அரசாணை...

அதன்படி, படம் வெளியாகும் 19ம் தேதி அன்று அதிகாலை 4 மணி மற்றும் 7 மணி என இரண்டு காட்சிகளும், 20ம் தேதியில் இருந்து 24ம் தேதி வரை காலை 7 மணிக்கும் சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி வழங்கி அரசாணை வெளியாகியுள்ளது. விடுமுறை தினத்தை ஒட்டி வெளியாகும் இந்தப் படத்திற்கு தினசரி 5 காட்சிகள் கிடைத்திருப்பதை ரசிகர்கள் இதனை வரவேற்று மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in