சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான ரவீந்தரின் ஜாமீன் மனு மீதான உத்தரவை, சென்னை முதன்மை உயர்வு நீதிமன்றம் தள்ளிவைத்தது.
லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனரான தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சுமார் 16 கோடி வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்தப் புகாரின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது சிறையில் இருக்கிறார் ரவீந்தர்.
இதற்கிடையே தனது கணவர் ரவீந்தருக்கு சிறையில் ஏ கிளாஸ் வசதிகள் வழங்குமாறு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார் ரவீந்தரின் மனைவி மகாலட்சுமி. ஆனால் மகாலட்சுமியின் மனு நிராகரிக்கப்பட்டது.
முன்னதாக ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மோசடி வழக்கில் கைதான ரவீந்தர் மீண்டும் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்தது. வரும் 25ம் தேதி இந்த ஜாமீன் மனு மீதான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று முதன்மை அமர்வு நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.