`அவன் இவன்' படத்தில் நடித்த பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்

`அவன் இவன்' படத்தில் நடித்த பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்

`அவன் இவன்' படத்தில் நடித்த பிரபல காமெடி நடிகர் ராமராஜ் காலமானார். அவருக்கு வயது 72.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள மேல சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராஜ். கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின் சினிமாவுக்கு வந்த ராமராஜிக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர், இயக்குநர் பாலாவின் படமான ‘அவன் இவன்’ படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த காமெடி நடிகர் ராமராஜ், தன்னுடைய வசன உச்சரிப்பால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர்.

கடந்த ஒரு மாதமாக ராமராஜ் உடல்நிலை சரியில்லாமல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடிகர் ராமராஜின் மறைவிற்கு திரைத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in