தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் யார் தெரியுமா?

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் யார் தெரியுமா?

2009 முதல் 2014ம் ஆண்டு வரையிலான 6 ஆண்டுகளுக்கான சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைக்கலைஞர்களுக்கான தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூபாய் 1 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.75 ஆயிரம், சிறந்த படத்திற்கான சிறப்புப் பரிசு ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 5 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

சின்னத்திரை விருதுகளும் 2009 முதல் 2013 ஆண்டுகள் வரை சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ஆண்டின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்குத் தலா ரூ. 1 லட்சமும், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என தலா 3 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.

கோல்டன் குளோப்
கோல்டன் குளோப்

சிறந்த நடிகர் விருது:

2009 - கரண் (மலையன்), 2010 - விக்ரம் (ராவணன்), 2011 - விமல் (வாகை சூடவா), 2012 - ஜீவா (நீதானே என் பொன் வசந்தம்), 2013 -ஆர்யா (ராஜா ராணி), 2014 - சித்தார்த் (காவியத் தலைவன்)

சிறந்த இயக்குநர் விருது:

2009 - வசந்தபாலன் (அங்காடித் தெரு), 2010- பிரபு சாலமன் (மைனா), 2011- ஏ.எல்.விஜய் (தெய்வத்திருமகள்), 2012- பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9), 2013- ராம் (தங்கமீன்கள்), 2014- ராகவன் (மஞ்சப்பை).

சிறந்த இசையமைப்பாளர் விருது:

2009-சுந்தர் சி.பாபு(நாடோடிகள்), 2010-யுவன்சங்கர் ராஜா(பையா), 2011-ஹாரிஸ் ஜெயராஜ்(கோ), 2012-இமான்(கும்கி), 2013-ரமேஷ் விநாயகம்(ராமானுஜன்), 2014- ஏ.ஆர்.ரகுமான்(காவியத் தலைவன்).

2009 சிறந்த படங்கள்:

முதல் பரிசு - பசங்க, 2ம் பரிசு - மாயாண்டி குடும்பத்தார், 3ம் பரிசு - அச்சமுண்டு அச்சமுண்டு.

2010 சிறந்த படங்கள்:

முதல் பரிசு - மைனா, 2ம் பரிசு - களவாணி, 3ம் பரிசு - புத்ரன்.

2011 சிறந்த படங்கள்:

முதல் பரிசு - வாகை சூடவா, 2ம் பரிசு - தெய்வத்திருமகள், 3ம் பரிசு - உச்சிதனை முகர்ந்தால், சிறப்பு பரிசு - மெரினா

2012 சிறந்த படங்கள்:

முதல் பரிசு - வழக்கு எண் 18/9, 2ம் பரிசு - சாட்டை, 3ம் பரிசு - தோனி, சிறப்பு பரிசு - கும்கி

2013 சிறந்த படங்கள்:

முதல் பரிசு - ராமானுஜம், 2ம் பரிசு - தங்கமீன்கள், 3ம் பரிசு - பண்ணையாரும் பத்மினியும், சிறப்பு பரிசு - ஆள்

2014 சிறந்த படங்கள்:

முதல் பரிசு - குற்றம் கடிதல், 2ம் பரிசு - கோலி சோடா, 3ம் பரிசு - நிமிர்ந்து நில், சிறப்பு பரிசு - காக்கா முட்டை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in