பாஜக பெண் நிர்வாகி காயத்ரி ரகுராமுக்கு தமிழக அரசின் விருது அறிவிப்பு!

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராமுக்கு தமிழக அரசின் சிறந்த நடனக் கலைஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை வெளியான சிறந்த படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள், குணசித்திர நடிகர்கள், பின்னணி பாடகர்கள், பாடலாசிரியர்கள் நடனம், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு தரப்பிலான தமிழக அரசின் மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுப்பட்டியலில் தான் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராமும் இடம்பெற்றுள்ளார்.

பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவில் மாநிலத் தலைவராக இருக்கும் காயத்ரி ரகுராமுக்கு 2014-ம் ஆண்டுக்கான சிறந்த நடனக்கலைஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் என்னும் படத்தில் சிறந்த நடனம் அமைப்பிற்காக காயத்ரி ரகுராமுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிபெற்ற `நிமிர்ந்து நில்' படத்தை சமுத்திரகனி இயக்கி இருந்தார். பாஜக மூத்த நிர்வாகி காயத்ரி ரகுராமுக்கு தமிழக அரசு விருது அறிவித்திருப்பது அரசியல் வட்டத்தையும் கடந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in