
தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித், பிரபல நடிகரான தலைவாசல் விஜய்யின் மகளை மணக்க இருக்கிறார்.
தனது 17 வயதில் ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு அணிக்காக அறிமுகமானவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாபா அபராஜித். 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். இதனைத் தொடர்ந்து 2013-14 துலீப் டிராபியில் மேற்கு மண்டலத்திற்கு எதிராக தென் மண்டல அணியில் விளையாடிய அபராஜித், இரட்டை சதம் விளாசி அசத்தினார். தற்போது இந்திய `ஏ' அணியில் விளையாடி வரும் அவர், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்.
சமீபத்தில் பாபா அபராஜித்திற்கும் பிரபல நடிகரான தலைவாசல் விஜய்யின் மகளுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விரைவில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.