சம்ஸ்கிருதத்தை விட தமிழ் தான் பழமையான மொழி: இந்தி பாடகர் நெத்தியடி!

சம்ஸ்கிருதத்தை விட தமிழ் தான் பழமையான மொழி:  இந்தி பாடகர் நெத்தியடி!

உலகிலேயே தமிழ்தான் மிகப் பழமையான மொழி என்று பத்மஸ்ரீ விருது பெற்ற இந்தி பாடகர் சோனு நிகம் கூறியுள்ளார்.

ஆங்கில மொழிக்குப் பதிலாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் கூட்டத்தில் பேசியது இந்தியா முழுவதும் சர்ச்சையானது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் இந்தி நடிகர் அஜய்தேவ்கன் மற்றும் சுதீப்பின் ட்விட்டர் உரையாடல்கள் நாடு முழுவதும் இந்தி தேசிய மொழியா என்ற விவாதத்தை எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் பத்மஸ்ரீ விருது பெற்ற இந்தி பாடகர் சோனு நிகம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, “என்னுடைய அறிவுப்படி இந்தி தேசிய மொழி என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எங்குமே கூறப்படவில்லை. இது தொடர்பாக நிபுணர்களிடமும் விவாதித்துவிட்டேன். இந்தி நாட்டில் பெரும்பான்மையோரால் பேசப்படும் மொழி. அதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், தமிழ் மொழி தான் உலகிலேயே பழமையான மொழி என்பதை நாம் அறிவோமா? தமிழுக்கும், சமஸ்கிருதத்திற்கும் இடையே விவாதங்கள் போய்க்கொண்டிருக்கின்றது. தமிழ் தான் உலகின் மிகவும் பழமையான மொழி என்று மக்கள் சொல்கிறார்கள்” என்று" அவர் கூறினார்.

மேலும், " ஏற்கெனவே பல உள்நாட்டு பிரச்சனைகளை சந்தித்து வரும் நம் நாட்டில் இந்த சர்ச்சை தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும். இந்தியைக் கட்டாயம் பேச வேண்டும் என்று பிறர் மீது மொழியைத் திணித்து, நாட்டில் நல்லிணக்கத்தை சிதைக்க முயற்சி நடைபெறுகிறது. எதற்காக அனைவரும் இந்தி பேச வேண்டும் எனுறு தெரியவில்லை. எந்த மொழி பேச வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு உள்ளது" என்று சோனு நிகம் கூறியுள்ளார். அவரின் பேச்சுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in