`75 கோடி செலவழித்தால் 30% சலுகை’: அதிர்ச்சி கொடுத்த ஆஸ்திரேலிய அமைச்சர்

`75 கோடி செலவழித்தால் 30% சலுகை’: அதிர்ச்சி கொடுத்த ஆஸ்திரேலிய அமைச்சர்

75 கோடி செலவழித்து திரைபடங்கள் எடுத்தால், 30 சதவீத சலுகைகள் தருவதாக ஆஸ்திரேலிய அமைச்சர் கூறியதைக் கேட்டு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய அமைச்சர் ஹான் ரோஜர் குக் தலைமையிலான குழு, அந்நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்தவும் தொழில் முதலீட்டை ஈர்க்கவும் இந்தியா வந்துள்ளது. இந்தக் குழு, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களை சென்னையில் இன்று சந்தித்தது. இதில் இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (CII) தலைவரும் தயாரிப்பாளருமான டி.ஜி.தியாகராஜன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, தனஞ்செயன், ரவி கொட்டாரக்கரா, சுரேஷ் காமாட்சி, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் மோகன் ராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேற்கு ஆஸ்திரேலிய அமைச்சர் ஹான் ரோஜர் குக்கை வரவேற்கும் தயாரிப்பாளார் டி.ஜி.தியாகராஜன்
மேற்கு ஆஸ்திரேலிய அமைச்சர் ஹான் ரோஜர் குக்கை வரவேற்கும் தயாரிப்பாளார் டி.ஜி.தியாகராஜன்

இதில் பேசிய ரோஜர் குக், மேற்கு ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்புகளை நடத்த வருமாறு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். அங்கு, சுமார் 75 கோடி செலவழித்து படம் எடுத்தால், 30 சதவீதம் சலுகைகள் அளிப்பதாகக் கூறினார். அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்கள், அங்கு எத்தனைக் கோடிக்கு படம் எடுத்தாலும் 30 சதவீத சலுகை தேவை என கோரிக்கை வைத்தனர். அதை பரிசீலிப்பதாக அவர் தெரிவித்தார்.

பின்னர் இந்திய சினிமா, தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சி பற்றியும் தயாரிப்பாளர்கள் எடுத்துக் கூறினர். முன்னதாக இந்தக் கூட்டத்தில், மேற்கு ஆஸ்திரேலியாவில், படப்பிடிப்புகளுக்கு ஏற்ற எழில் கொஞ்சம் இடங்கள் திரையிட்டுக் காட்டப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in