தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: களமிறங்குகிறது புதிய அணி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: களமிறங்குகிறது புதிய அணி்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் நடக்கவிருக்கின்ற நிலையில், தற்போது தயாரிப்பாளர் மன்னன் தலைமையில் திரைப்பட தயாரிப்பாளர்களின் " உரிமைக் காக்கும் அணி " என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி இருக்கிறார்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2023 - 2026ம் ஆண்டுக்கான தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட பலரும் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த நிலையில்தான் தயாரிப்பாளர் மன்னன் தலைமையில் திரைப்பட தயாரிப்பாளர்களின் " உரிமைக் காக்கும் அணி " என்ற பெயரில் ஒரு புதிய அணி உருவாகியுள்ளது. இந்த புதிய அணியில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் உட்பட 300 பேர் இணைந்துள்ளனர்.

ஹோட்டல் கிங்ஸ் பார்க்கில் இந்த அணியின் அலுவலகம் இன்று காலை 9 மணியளவில் பூஜையுடன் துவங்கப்பட்டது. விரைவில் எந்தெந்த பொறுப்புகளுக்கு யார் யார் களமிறங்க இருக்கிறார்கள் என்று அறிவிப்போம் என்று இந்த அணியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in