தயாரிப்பாளர் சங்கம்- பெப்சி மீண்டும் மோதல்

தயாரிப்பாளர் சங்கம்- பெப்சி மீண்டும் மோதல்

பெப்சி அமைப்புடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாகத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், ஆர்.கே.செல்வமணி தலைமையிலான பெப்சி அமைப்புக்கும் இடையே சம்பளம் விஷயத்தில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆர்.கே.செல்வமணி
ஆர்.கே.செல்வமணி

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ``தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் மே 2 அன்று (நேற்று) நடந்தது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய இரு தரப்பினருக்கும் மட்டுமே காலங்காலமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்து வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தம் மார்ச் 9-ம் தேதி அன்று நடந்தது.

ஆனால் ஒப்பந்தத்தை அவமதிக்கும் வகையில் பெப்சி அமைப்பினர் செயல்பட்டதால் இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தமானது ரத்து செய்யப்படுகிறது. இனி தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை வைத்து படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்ளலாம்'' என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.