தரமான படங்களையும், நடிகர்களையும் தாங்கிப் பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியது இல்லை: கமல்ஹாசன் நெகிழ்ச்சி

தரமான படங்களையும், நடிகர்களையும் தாங்கிப் பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியது இல்லை: கமல்ஹாசன் நெகிழ்ச்சி

தரமான படங்களையும், நடிகர்களையும் தாங்கிப் பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியது இல்லை. அந்த வெற்றி வரிசையில் என்னையும், எங்கள் 'விக்ரம்' படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பின் 'விக்ரம்' படம் சூப்பர் ஹிட்டாகி இருப்பதால் கமல்ஹாசன் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளரும் கமல்ஹாசன் என்பதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லக்சஸ் சொகுசு காரை பரிசளித்துள்ளார். உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு, அப்பாச்சி 160 ஆர்டிஆர் இரு சக்கர வாகனத்தையும் கமல் வழங்கியுள்ளார்.

இதனிடையே விக்ரம் படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது. தமிழ் தவிர்த்து பிற மொழிகளிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை இந்த படம் பெற்றுள்ளது. இதனால் ஒவ்வொரு மொழிக்கு தனித்தனியாக நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.

அதில் தமிழில் பேசிய வீடியோவில் அவர் கூறுகையில், ‛‛தரமான படங்களையும், நடிகர்களையும் தாங்கிப் பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியது இல்லை. அந்த வெற்றி வரிசையில் என்னையும், எங்கள் 'விக்ரம்' படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம். தம்பிகள் விஜய் சேதுபதி, பஹத் பாசில், செம்பன் வினோத், நரேன் என வீரியமிக்க நடிகர் படை இதற்கு முக்கிய காரணம். கடைசி 3 நிமிடங்கள் வந்து திரையரங்குகளை அதிர வைத்த தம்பி சூர்யா அன்பிற்காக மட்டுமே நடித்தார். நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாய் காட்டிவிடலாம். லோகேஷிற்கு சினிமாவிலும், என் மீதும் இருக்கும் அன்பு, படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும், படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. ரசிகர்களின் அன்பும் அவ்வாறே இருக்கிறது. உங்கள் அன்பு தொடர விழையும் ராஜ்கமல் இன்டர்நேஷனலின் ஊழியன், உங்கள் நான்" என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in